Showing posts with label book sale. Show all posts
Showing posts with label book sale. Show all posts

Friday, January 9, 2009

Chennai Book Fair 2009

Kadavulum Kandasaamy Pillaiyum

சென்னை புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை விழா .

32 வது சென்னை புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது .ஜன 08-01-09 தொடங்கி ஜன 18 வரை நடக்கவிருக்கும் இந்த கண்காட்சியில் 400 கும் மேற்பட்ட பதிப்பகத்தார் தங்களது புத்தக்கம்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

வார நாட்களில் மதியம் 2.30 pm to 8.30 pm ,விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை கண்காட்சியை பார்க்கலாம் .

இடம் :

செயின்ட் ஜோர்ஜ் ஆங்கிலோ இந்தியா பள்ளி .

பச்சியப்பன் கல்லூரி எதிரில் ,

பூந்தமல்லி சாலை ,அமைந்தகரை ,
சென்னை - 30.

தமிழ் இலக்கிய பிரியர்கள் மிகவும் விரும்பும் சில பதிப்பகத்தார் , வெளியிடுகளை வாங்க செல்ல வேண்டிய கடை எண்கள் .

1.காலச்சுவடு பதிப்பகம், கடை எண் : 5

2.N.C.B.H , கடை எண் : 16

3.உயிர்ம்மை பதிப்பகம், கடை எண் :17

4.உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் கடை எண் : 240-241,

5.நிவேதிதா பதிப்பகம், கடை எண்:210-211

6.நர்மதா பதிப்பகம் ,கடை எண் : 26

7.சந்தியா பதிப்பகம் ,கடை எண் : 232-233

8. காவ்யா , கடை எண் :43-44 .

9.தமிழினி . கடை எண்

..............

மேலும் பதிப்பகங்கள் பற்றிய விவரங்கள்ளுக்கு Bapasi இந்த வலை தளத்துக்கு செல்லவும் .

சில சிறந்த தமிழ் எழுத்தாளர்கள்:

திரு.சுந்தர ராமசாமி ,

திரு.சுஜாதா ,

திரு.முத்து லிங்கம்.

திரு.கி .ராஜநாராயணன் .

வாங்க வேண்டிய சில புத்தகங்கள் எனக்காக

அங்கே இப்ப என்ன நேரம் ,ஆசிரியர் :முத்து லிங்கம்

பூமியின் பாதி வயது கட்டுரை தொகுப்பு . ஆசிரியர் : முத்து லிங்கம்

நான் மஹாராஜாவின் ரயில் வண்டி படித்து விட்டேன் ஆனாலும் நண்பர்கல்லுகு பரிசளிக்க .ஆசிரியர் .முத்து லிங்கம் .

வியத்தலும் இலமே .

கடிகாரம் அமைதியாக எண்ணி கொண்டு இருக்கிறது .ஆசிரியர் :முத்து லிங்கம் .

இரத்தம் ஒரே நிறம் ,ஆசிரியர் : சுஜாதா ,

செம்மணி வளையல் ,ரஷ்ய கதைகள் ,வெண்ணிற இரவுகள் ,சூதாடி

கடவுளும் கந்தசாமி பிள்ளையும் .ஆசிரியர் :புதுமை பித்தன் ,இந்த புத்தககம் எத்தனை முறை வாங்கினாலும் திரட்டு போகிறது... ஒரு வேலை கதை தான் காரணம் ,இல்லை புதுமை பித்தன் ?

நான் முதன்முதலில் தொலைத்த புத்தகம் ,புளியமரத்தின் கதையும் வாங்க வேண்டும் .எப்போதுமே புத்தக கண்காட்சி நடக்கும் சமயங்களில் என்னிடம் அவ்வளவாக பணம் இருக்காது ,நானும் நண்பன் பொன்னுசாமி கடன் வாங்கி புத்தகங்கள் வாங்குவது வழக்கம் .ஒவ்வொரு முறையும் நாங்கள் வாங்கும் டிக்கெட் களுக்கு பரிசு விழுமா என்று பேசி கொள்வோம்,ஆனால் விழுந்தது இல்லை ,சிரித்து விட்டு புத்தக சுமை உடன் நடந்து செல்வது தனி சுகம் ,இந்த வருடம் என்னிடம் பணம் உள்ளது .நேரம் உள்ளதா எனது நண்பர்கள்ளுக்கு என்று தெரிய வில்லை. எனவே புத்தக கண்காட்சியில் பார்ப்போம் .மீண்டும் சந்திக்கும் வரை .உங்கள் விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன ,என்ன தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும் ,பிழை திருத்த உங்கள் உதவி தேவை .ஆங்கிலத்துக்கு சரியான மாற்று சொல் இருந்தால் தெரிவிக்கவும் .நன்றி.